கடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் சடலமாக மீட்பு
கடந்த சில நாட்களாக கடத்தப்பட்டதாக தேடப்பட்டு வந்த பம்பலபிட்டிய கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் மொஹமட் ஷகீம் சுலைமான் என்பவரின் சடலம் மாவனல்லை ருகுலேகம பிரதேசத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹெம்மாதகம பாதையில் இனந்தெரியாத நிலையில் காணப்பட்ட சடலத்தை கொழும்பிலிருந்து வந்த விசேட பொலிஸ் குழு மற்றும் இறந்தவரின் தந்தை, உறவினர்கள் ஆகியோர் மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் அடையாளம் கண்டுள்ளனர்.
வர்த்தகர் ஷகீமை, வேறு ஒரு இடத்தில் கொலை செய்து விட்டு, குறித்த இடத்தில் கொண்டு வந்து போட்டுள்ளார்களா? அல்லது அந்த இடத்திலேயே அவரைக் கொலை செய்தார்களாக என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நேற்று மாலை கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பிலான மரண விசாரணைகள் இன்று (25) இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பம்பலப்பிட்டி கொத்தலாவலை அவனியூவைச் சேர்ந்த மொஹமட் ஷகீம் கடந்த திங்கட்கிழமை இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply