இன மோதல்களை முடிவுக்கு கொண்டு வர மியான்மரில் அமைதி பேச்சுவார்த்தை
மியான்மரில் பல தசாப்தங்களாக நடந்து வரும் இன ரீதியான மோதல்களை முடிவுக்கு கொண்டு வர தேவையான முறைகளை ஆலோசிக்க சமாதான மாநாடு ஒன்று நடக்கவுள்ளது.ஆயுதம் தாங்கிய குழுக்கள், அரசு தரப்பு, ராணுவம், மற்றும் சிவில் சமூக குழுக்கள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
மியான்மர் தலைநகரில் நடக்கவுள்ள இந்த 5 நாள் மாநாட்டில், ஐநாவின் தலைமைச் செயலாளர் பான் கி மூன் கலந்து கொள்ளவுள்ளார்.
நாட்டின் பல்வேறு குழுக்கள் இடையே அமைதியை உருவாக்குவதை நாட்டின் முன்னுரிமையாக்கும் முயற்சியில் மியான்மரின் நடைமுறை தலைவராகக் கருதப்படும் ஆங் சான் சூ சி ஈடுபட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply