ஜனாதிபதியின் இணைய முடக்கம் – 3 பிரதான காரணங்கள் கண்டுபிடிப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஊடுருவி, அதன் தரவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான பிரதான மூன்று காரணங்களை கண்டறிய முடிந்துள்ளதாக கணினி அவசர பிரிவின் பிரதம பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.சாதாரணமாக இணையத்தளங்கள் ஊடுருவாளர்களிடமிருந்து அதனை பாதுகாத்துக் கொள்வதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
01.சேவரை புதுப்பிக்காமை (SERVER UPDATE)
02.மென்பொருளை புதுப்பிக்காமை (CONTROL PANEL & SOFTWARE UPDATE)
03.கடவுச் சொல்லை பாதுகாக்காமை (USERNAME & PASSWORD STRICTLY CONFIDENTIAL)
இதற்கமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலுள்ள தொழில்நுட்ப பிரச்சினைகளை அடையாளம் கண்டுக் கொள்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கணினி அவசர பிரிவின் பிரதம பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.
இந்த இணையத்தளத்தின் மீது நடாத்தப்பட்ட சைபர் தாக்குதல் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, குற்றப் புலனாய்வு பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பில் புறம்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு ஊடுருவிய சம்பவம் தொடர்பில் கடுகண்ணாவை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவனொருவன் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டிருந்ததுடன், மொறட்டுவை பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட மாணவனை செப்டம்பர் மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், மொறட்டுவை பகுதியில் கைது செய்யப்பட்ட 27 வயதான மற்றைய இளைஞனை செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply