கோத்தபாயவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை வெளிநாடு செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.குறித்த உத்தரவை கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று பிறப்பித்துள்ளார்.கோத்தபாய ராஜபக்ஷ வெளிநாடு செல்ல நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த 30 ஆம் திகதி எவன்காரட் விசாரணை தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கியதோடு, வெளிநாடு செல்ல தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply