இலங்கையில் முதலீடு செய்யுங்கள் நியூசிலாந்தில் அழைப்பு விடுத்தார் பிரதமர் ரணில்
இந்து சமுத்திரத்தின் நிதிக் கேந்திர நிலையமாக மாற்றமடையவுள்ள இலங்கையில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பங்களை பெற்றுக் கொள்ளுமாறு நியூசிலாந்து, இலங்கை வர்த்தக சமூகத்தினருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்புவிடுத்திருக்கின்றார்.நியூசிலாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் நியூசிலாந்தின் ஒக்லேன்ட் நகரின் வர்த்தக மற்றும் முயற்சிகள் தொடர்பான நிலையத்தில் இடம்பெற்ற இலங்கை, நியூசிலாந்து வர்த்தக சமூக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் பிரதமர் மேலும் உரையாற்றுகையில்,
சிறிய நாடாக இருந்தாலும் பெரிய நாடாக இருந்தாலும் முன்னேறிச் செல்ல வேண்டுமாக இருந்தால் பொருளாதார சந்தையும் புதிய உற்பத்திகளும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இரண்டு நாடுகளுக்கிடையில் வர்த்தக மற்றும் கைத்தொழில் சந்தர்ப்பங்களை விரிவுபடுத்திக் கொள்ளும் நோக்கிலேயே நான் நியூசிலாந்திற்கு மிகவும் வலுவான குழுவினரை அழைத்து வந்தேன்.
இரண்டு நாடுகளுக்கிடையிலும் நிறுவப்படவுள்ள உயர்ஸ்தானிகராலயங்களினூடாக இந்த செயற்பாடுகளை மேலும் முன்னேற்றிச் செல்ல முடியும் என நம்புகிறேன். இவ் வருடம் பெப்ரவரி மாதம் இலங்கை வந்திருந்த நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ நியூசிலாந்தின் முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைப்பதற்கான முறைமை தொடர்பில் ஆராய்ந்திருந்தார் என்றார்.
இந்த சந்திப்பில் அமைச்சர்களான சகல ரட்னாயக்க, ஹரீன் பெர்னான்டோ, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னான்டோ புள்ளே, பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டிருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply