சர்ஜிகல் ஆபரேஷன்: பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தாக்குதலுக்கு ரஷியா ஆதரவு
காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து அங்குள்ள தீவிரவாதிகள் முகாம்களை அழித்தது. 45-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சர்ஜிகல் ஆபரேஷன் என்று அழைக்கப்படும் இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்தது. மற்ற நாடுகள் மவுனம் காத்து வந்தன.ஆனால், தற்போது ரஷியா இதை வரவேற்றுள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கான ரஷிய தூதர் அலெக்சாண்டர் மதாகின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தானில் இந்தியா நடத்திய சர்ஜிகல் ஆபரேஷன் தவறானது அல்ல. இந்த தாக்குதல் நடத்துவதற்கு எல்லா உரிமையும் இந்தியாவிடம் இருக்கிறது.
தீவிரவாதிகளால் மனித உரிமைகள் பறிக்கப்படும் போது அந்த தீவிரவாதிகள் எந்த பகுதியில் இருந்தாலும் தாக்குவது தவறானது அல்ல. சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தி இங்கு அமைதியை சீர் குலைக்கும் நிலையை ஏற்படுத்தினார்கள். எனவேதான் இந்தியா இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறது.
தனது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பவர்களை தாக்குவதற்கு எல்லா உரிமைகளும் அந்தந்த நாடுகளுக்கு உள்ளன. அதன்படிதான் இந்தியா செயல்பட்டுள்ளது.
பாகிஸ்தானும், ரஷியாவும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதால் இந்தியா கவலை அடைய வேண்டாம். நாங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்த பயிற்சியை நடத்தவில்லை.
பாகிஸ்தான் இனியாவது அங்கு செயல்படும் தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply