ரணில் – மஹிந்த ஒப்பந்தம்: ஷிரந்தியை காப்பாற்றும் முயற்சியில் ரணில்

பாராளுமANURAன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸாரின் விசாரணை நிறைவடைந்துள்ளது.எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்தவுக்கு இடையிலான இரசிய இணைப்பு காரணமாகவே அவர் கைது செய்யப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட முன்னாள் ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக காணப்படுகின்ற விசாரணைகளை மூடி மறைக்கப்படும் “மஹிந்த ரணில் ரகசிய ஒப்பந்தத்தின்” ஒரு பகுதி என அவர் குறிப்பிட்டடுள்ளார்.

அத்துடன் போலி கடவுசீட்டு தயாரித்தமை மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுச்சீட்டு வைத்திருந்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச கைது செய்யப்படாமை அவர் மற்றும் ரணிலுக்கு இடையிலான இரகசிய உறவே காரணம் எனவும் மக்கள் விடுதலை முன்னணி அநுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று கொழும்பு கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply