ஏமனில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த அமெரிக்க பணயக்கைதிகள் 2 பேர் விடுதலை

USAஏமனில் அதிபர் ஆதரவு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் வான்தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் இதுவரை 6,800 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த 2 பேரை பணயக்கைதிகளாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பிடித்தனர்.அவர்களை பத்திரமாக மீட்க ஏமனின் அண்டை நாடான ஓமன் மூலம் அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. இதில் வெற்றி கிடைத்துள்ளது.ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் பிடியில் இருந்து அமெரிக்க பணயக்கைதிகள் 2 பேரையும் விடுதலை செய்து விட்டனர்.

இதில் உதவிய ஓமனின் மனிதநேய செயலுக்கு அமெரிக்கா நன்றி தெரிவித்துள்ளது.சிரியாவில் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வர சுவிட்சர்லாந்து நாட்டில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி, அமெரிக்க பணயக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பதை வரவேற்றார்.கடந்த 8–ந் தேதி ஏமனில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி ஒன்றின்போது சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களுடன், இப்போது விடுவிக்கப்பட்ட அமெரிக்க பணயக்கைதிகளும் விமானம் மூலம் நேற்று ஓமன் போய் சேர்ந்தனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply