பாகிஸ்தானில் பஸ்கள் நேருக்குநேர் மோதல் – 30 பேர் பலி
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநகரான லாகூரில் இருந்து சுமார் 600 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரஹிம் யார் கான் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று இரு பஸ்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 30 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மோசமான சாலைகள், முறையான பராமரிப்பு இல்லாத வாகனங்கள் போன்றவற்றால் பாகிஸ்தானில் இதைப்போன்ற சாலைவிபத்துகள் அடிக்கடி நிகழ்வது சகஜமாகி விட்டது, குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply