விண்வெளிக்கு பயணமான சீன வீரர்கள்
விண்வெளியில் தனக்கென ஒரு நிரந்தர விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான கட்டுமானப் பணியை சீனா கடந்த மாதம் தொடங்கியது. இந்த நிலையத்தை 2022-க்குள் கட்டி முடிக்கவும் திட்டமிட்டு இருக்கிறது. இங்கு ஒரு மாதம் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஷெங்ஷோவ்-11 (சொர்க்க வாகனம்) என்கிற விண்கலம் மூலம் ஜிங் ஹாய்பெங்க் (வயது 50), சென்டோங் (37 – வலது புறம் இருப்பவர்) ஆகிய 2 வீரர்களை விண்வெளிக்கு சீனா நேற்று அனுப்பி வைத்தது. அவர்கள் இருவரையும் ‘லாங் மார்ச்-2 எப்’ என்ற ராக்கெட் சீனாவின் ஜியூகுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு சுமந்து சென்றது. விண்வெளிக்கு பயணமான சீன வீரர்கள் இருவரையும் படத்தில் காணலாம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply