ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்றக்கோரி கையெழுத்து இயக்கம்: ஓ பன்னீர் செல்வம் துவங்கி வைத்தார்

அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு சசிகலா ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு அணியாகவும் பிரிந்தனர். 2 பேரும் தங்களுடைய பலத்தை நிரூபிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சசிகலா மீது அதிருப்தியில் உள்ள அக்கட்சியை சேர்ந்தவர்கள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்று அவருக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மறைந்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்றக்கோரி ஓ பன்னீர் செல்வம் தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கையெழுத்தை ஓ பன்னீர்செல்வம் இட்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply