பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 3 பேர் பலி, 80 பேர் காயம்

பிலிப்பைன்ஸ், நாட்டில் மின்டானயோ தீவில் உள்ள சுரிகாயோ டெல் நோர்டே மாகாணத்தில் நேற்று இரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மாகாண தலைநகர் சுரிகாயோ மற்றும் அதை சுற்றியுள்ள வீடுகள் குலுங்கின. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. ஏராளமான வீடுகளில் பெரிய அளவில் கீறல்கள் விழுந்தன. தகவல் அறிந்ததும் பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். இடிபாடுகள் அகற்றப்பட்டன. இந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியாகினர். 80 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதற்கிடையே 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply