இந்திய வெளியுறவுத்துறை செயலருடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் நாளை பேச்சு
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை புதுடில்லியில் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் சிவ்சங்கர் மேனனை சந்தித்துப் பேசவுள்ளதாகத் தெரிய வருகின்றது. இந்திய மத்திய அரசு விடுத்த அழைப்பை ஏற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் இன்று புதுடில்லி புறப்பட்டுச் சென்றனர். கூட்டமைப்பின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய நால்வருமே புதுடில்லி சென்றுள்ளனர்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply