காங்கோவில் 2 ஐ.நா. நிபுணர்கள் தலை துண்டித்து கொலை

காங்கோ நாட்டில் அரசுக்கு எதிராக தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தீவிரவாத இயக்க தலைவரும், மலைவாழ் மக்கள் தலைவருமான காம்வினா சபு என்பவர் ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டார்.அதை தொடர்ந்து கசாய் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்ட 40 போலீசார் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று ஐ.நா. அமைதிப்படையை சேர்ந்த 2 நிபுணர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் அமெரிக்காவை சேர்ந்த மைக்கேல் ஷார்ப், மற்றொருவர் சுவீடனை சேர்ந்த ஷைடா கடாலன்.

இவர்களில் ‌ஷடா கடாலவன் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 12-ந்தேதி இவர்கள் கடத்தப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply