புலிகளை அழிக்க உதவிய இந்திய கடற்படை: தடுமாறிய சுனில் லன்பா

விடுதலைப் புலிகளை அழிக்கும் நடவடிக்கையில் இலங்கைக்கு இந்திய கடற்படை உதவியதாக இந்திய கடற்படைத் தலைவர் சுனில் லன்பா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, அரக்கோணம் ஐ.என்.எஸ்.ராஜாளி கடற்படை விமானத் தளத்தின் வெள்ளி விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

விழாவின் ஒரு பகுதியாக, நீண்ட காலமாக கடற்படை சேவையில் ஈடுபடுத்தப்பட்ட TU 142 M என்ற விமானங்களுக்கு ஓய்வும் அளிக்கப்பட்டது. இவ்வகை விமானங்கள், இலங்கை யுத்தத்தின்போது இலங்கையின் கரையோரப் பகுதிகளைக் கண்காணிக்கும் பணியில் அமர்த்தப்பட்டிருந்ததாக சுனில் லன்பா குறிப்பிட்டார்.

எனினும், சற்று நேரத்தில் சுதாகரித்துக்கொண்ட லன்பா, தாம் குறிப்பிட்டது 1980 காலப் பகுதியில் இந்திய அமைதிப் படை இலங்கை சென்றிருந்தபோது… என்று திருத்தினார்.

லன்பா கூறியதை மறுத்து குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு நிபுணர்கள், சுனில் லன்பா குறிப்பிட்டது 2000களின் இறுதிப் பகுதியிலேயே என்றும், போர் உச்சத்தை எட்டியிருந்த வேளையில் விடுதலைப் புலிகள் தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக, அவர்கள் தப்பிச் செல்லக்கூடிய சாத்தியமான கடல் வழிகளை முடக்கும் கண்காணிப்புப் பணிகளிலேயே TU 142 M ரக விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன என்றும் கூறியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply