ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரெயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: 10 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள இரண்டு மெட்ரோ ரெயில் நிலையங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. நகரின் மையமான பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குண்டுவெடிப்பு காரணமாக ரெயில் நிலையங்கள் முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இருப்பினும், 10 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து 3 ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுக்காஷேங்கோ, புதின் இடையிலான சந்திப்பு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறவிருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply