சிறுமியிடம் காதலை தெரிவிக்க விமானத்தில் இருந்து குதித்த சிறுவன்(வீடியோ இணைப்பு)
உலகம் முழுவதும் காதலர்கள் தங்கள் காதலை பல விதமாக தெரிவிக்கின்றனர். கடிதம் மூலமாகவும், நண்பர்கள் மூலம் தூதும் விடுகின்றனர். ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்து வினோதமான முறையில் தனது காதலை தெரிவித்தான்.அவனது பெயர் டை மெயர்ஸ். இவன் பாட்டார் என்ற சிறுமியை காதலித்தான். அவளை கவரும் வகையில் சாகசம் செய்து தனது காதலை தெரிவிக்க விரும்பினான்.
அதை தொடர்ந்து விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்தான். அப்போது தனது கையில் டியர் கே.பி. நான் உன்னை காதலிக்கிறேன். நீ என்னை காதலிக்கிறாயா? என்ற பேனரை ஏந்தியபடி காற்றில் மிதந்தபடி தரையில் இறங்கினான். அதைப் பார்த்த சிறுமி பாட்டர் மனம் நெகிழ்ந்தார். வேகமாக ஓடி வந்து டை மெயர்சை கட்டிப்பிடித்து அவனது காதலை ஏற்றுக் கொண்டாள்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply