ரிஷாட் பதியுதீன் இராஜினாமா?

கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தன்னுடைய அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வதற்குக் கலந்தாலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வில்பத்து சரணாலயத்துக்கு வடக்காக உள்ள காடுகளில் நான்கு காடுகளை, பாதுகாப்பான சரணாலயங்களாக பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2017 மார்ச் 24ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பை தெரிவித்தே, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தன்னுடைய அமைச்சுப் பதவியைத் துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.

இதேவேளை, சர்ச்சைக்குரிய இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டிருந்த போதிலும், அவர், நேற்றுவரையிலும் நேரம் ஒதுக்கிகொடுக்கவில்லை.இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த அமைச்சர் ரிஷாட், இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு தன்னுடைய கடும் எதிர்ப்பை வெளிகாட்டியுள்ளார் என்றும் தெரியவருகிறது.

இவ்வாறான நிலைமைகளில், அரசாங்கத்தில் தன்னால் தொடர்ந்து இருக்கமுடியாது என்றும், அமைச்சு பதவியை இராஜினாமா செய்யபோவதாகவும் அவர் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply