கரையைக் கடந்தது மோரா புயல்
மோரா புயல் கரையைக் கடந்துள்ளதாக வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மொரா புயல் இன்று பங்களாதேஷின் கரைப் பகுதியை சென்றடைந்துள்ளதுடன், இலங்கையில் அதன் தாக்கம் குறைவடைந்து விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் பெய்துவரும் பலத்த காற்றுடன் கூடிய மழை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமணடலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
எனினும் இன்று (30) நாட்டின் பல பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மத்திய மலை பிரதேசங்களின் மேற்கு சரிவுகளில் மற்றும், நாட்டை சூழவுள்ள கடற் பிராந்தியங்களிலும் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply