விருப்பு வாக்குகளைக் கருத்திற்கொண்டு செயற்பட்டமையால் அனர்த்தங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது

காலி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது.அரசியல்வாதிகள் அபிவிருத்தியைக் கருத்திற்கொள்ளாமல், விருப்பு வாக்குகளைக் கருத்திற்கொண்டு செயற்பட்டமையால் இன்று பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் செயற்றிறன் மிகு அபிவிருத்திக்கு அனைத்து அரசியல்வாதிகளினதும் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை மாவட்ட அபிவிருத்திக்காக பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சித்த போதிலும், சில அரசியல்வாதிகளின் தலையீட்டினால் அதனை நிறைவேற்ற முடியாமற்போனதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply