பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் நலம் விசாரித்த மோடி
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டுக்காக கஜகஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் நலம் விசாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு கஜகஸ்தான் தலைநகர் அஸ்தனாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் கஜகஸ்தான், ரஷ்யா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த அமைப்பில் பார்வையாளராக இருந்த இந்தியாவும் பாகிஸ்தானும் உறுப்பினராக சேர தீவிர முயற்சி எடுத்து வந்தன. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் உறுப்பினர்களாக சேர்த்து கொள்ள ஷாங்காய் அமைப்பு முடிவு செய்துள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நாவாஸ் ஷெரீப் ஆகியோர் அஸ்தானா நகருக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில், இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மோடி, நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது, மோடி, நவாஸ் இருவரும் பரஸ்பரம் வரவேற்றனர்.
மேலும், நவாஸ் ஷெரீப் மற்றும் அவருடைய தாயாருடைய உடல்நலம் குறித்து மோடி நலம் விசாரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply