மலேசியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு: கண்டனம் தெரிவித்த ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் வைகோ நன்றி
மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வராக உள்ள பேராசிரியர் ராமசாமி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மலேசியா சென்றார். நேற்று காலை கோலாலம்பூர் விமான நிலையம் சென்ற வைகோவை தடுத்து நிறுத்திய விமான நிலைய அதிகாரிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை.
மலேசியா நாட்டுக்கான ஆபத்தானவர் என்ற பட்டியலில் வைகோவின் பெயரும் இடம்பெற்றிருப்பதாக கூறி தடுத்து வைத்துள்ளனர். சென்னைக்கு திருப்பி அனுப்பவும் ஏற்பாடு செய்துள்ளனர். மலேசிய அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் மலேசியாவில் இருந்து வைகோ சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது, ‘மலேசிய துணை பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. மலேசிய அதிகாரிகள் கண்ணியமாகவே நடத்தினர்’.
,ஆனால் 16 மணி நேரம் காத்திருக்க வைத்தனர். மலேசிய அதிகாரிகள் இரண்டு மணி நேரம் என்னிடம் விளக்கம் கேட்டனர். மலேசியாவில் நடந்த சம்பவத்திற்கு இந்திய தூதர் வருத்தம் தெரிவித்தார். கண்டனம் தெரிவித்த ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி’, என அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply