வேலைநிறுத்தத்தில் மீண்டும் குதிக்க மருத்துவர்கள் முஸ்தீபு

ஜனாதிபதி அலுவலகம் சைற்றம் தொடர்பில் வெளியிட்டுள்ள திரிபுபடுத்தப்பட்ட அறிக்கையில் இதுவரை மாற்றங்களை முன்னெடுக்காததால் இன்னும் சில தினங்களில் வேலைநிறுத்தத்தை ஆரம்பிப்பதற்கான நாளை குறிக்க வேண்டிய கட்டாயம் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு உருவாகியிருப்பதாக அதன் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் நேற்று நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு நாளை வியாழக்கிழமை (29) கூடி இது தொடர்பில் ஆராயும் என்றும் அவர் தெரிவித்தார்.

“அமைச்சரவைப் பத்திரத்தில் என்ன கூறியிருந்தாலும் பரவாயில்லை.இந்த நாட்டை முட்டாளாக்க முடியாது. போலி நிறுவனமான சைற்றம் மீது சட்டம் இதுவரை அமுல்படுத்தப்படவில்லை.ஆனால் நேர்மையான போராட்டக்காரர்கள் மற்றும் வைத்தியர்கள் மீதே சட்டம் அமுல்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply