இழுவைமடி வலையில் மீன் பிடித்தால் ரூ. 50,000 தண்டம், இருவருட சிறை

பொட்டம் ட்ரோலிங் எனப்படும் இழுவைமடி வலை தடைசெய்யப்படுவதால் இதனை மீறி செயற்படுபவர்களிடம் ஆகக் குறைந்தது 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் அல்லது இரண்டுவருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இழுவைமடி முறை தடைசெய்யப்படுவதால் பிடிக்கப்படும் மீன்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், எதிர்காலத்துக்கான கடல்வளத்தைப் பாதுகாத்து மீன் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றும்அவர் கூறினார்.

கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார். இழுவைமடி தொழிலை தடை செய்வது தொடர்பான தனிநபர் சட்டமொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பித்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்டு அரசாங்கம் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இழுவைமடி விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

கடல்வளத்துக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் மீன்பிடி முறையான இழுவை மடி வலை பயன்பாட்டை தடைசெய்ய முன்வந்தமை குறித்து பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். குறிப்பாக வடபகுதி மீனவர்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இது இருந்து வந்தது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் குறித்த மீன்பிடி முறை தொடர்பில் முரண்பாடு இல்லை. கொள்கையளவில் இரு நாடுகளும் இழுவைமடி முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் பிரச்சினைக்கு பொறுப்பு வாய்ந்த தரப்புக்களில் எவர் மீறுவதாக இருந்தாலும் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த முறையினால் கடலின் அடித் தளத்துக்கு மாற்றீடு செய்ய முடியாத பாரிய சேதம் ஏற்படுகிறது என்பது விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக் கொண்ட உண்மை நிலைப்பாடாகும். எங்கள் மீனவர்களுக்கு இந்திய மீனவர்களின் ஊடுருவல் பாரிய பிரச்சினையாக இருந்தது. சிறிய நீரிணையினால் பிரிந்துள்ள இரு நாட்டு மீனவர்களும் ஒருவர் மற்றவரின் தயவில் வாழ்வது தவிர்க்க முடியாதது. பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருப்பதால் எல்லையை கடப்பது சாதாரணமானது. எனினும், இழுவை மடி தொழிலை செய்வதால் கடல் வளம் அழிக்கப்படுகிறது. இழுவைமடி தொழிலை செய்யும் இந்திய மீனவர்களே 99 வீதமான ஊடுவரில் ஈடுபடுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக நான் கொண்டுவந்த தனி நபர் பிரேரணையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, சட்டத்திருத்தமாகக் கொண்டுவந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது..

இதேவேளை, வடக்கில் சிலர் இம்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன்.

சேற்றுக் கடலில் மட்டும்தான் இந்தத் தொழிலை செய்கிறோம். அங்கு பாறைகள் இல்லை, கடல் அடியை பாதிக்கவில்லை என்ற கருத்தை அவர்கள் முன்வைத்திருந்தார்கள். தாம் செய்யும் தொழில் சிறிய அளவிலான படகுகள் என்றும், அவற்றின் விசை மிகவும் குறைந்தது என்றும் சிலர் கருத்துக்களைச் சொல்லியுள்ளனர்.

படகின் அளவு அல்லது அதன் பிரமாணம் முக்கியமான விடயம் இல்லை. இப்படியாக சில இடங்களில் செய்வது நீரியில் வளத்தை பாதிக்காது என்று விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க முடியுமாக இருந்தால் அதனை தடுக்கவேண்டிய அவசியம் கிடையாது. எனினும், எமக்கு இருக்கும் தகவல்களின் படி கடல் வளத்துக்கு பாதிப்பு ஏற்படாது இத்தொழிலை நடத்த முழடியும் என்பது சந்தேகம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply