இலங்கை மீனவர்களுக்காகவே அன்றி தென்னிந்திய மீனவர்களின் நலனுக்காக செயற்படவில்லை
இலங்கை மீனவர்களுக்காகவே அன்றி தென்னிந்திய மீனவர்களின் நலனுக்காக செயற்படவில்லை என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து இங்குள்ள கடல் வளத்தை இந்திய மீனவர்களே அதிகமாக சூறையாடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆறாம் திகதி பாராளுமன்றத்தில் இழுவை படகு முறையை தடை செய்து நிறைவேற்றப்பட்ட கடற்றொழில் திருத்தச் சட்டம் இந்திய மீனவர்களின் நலனுக்காக தயாரிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வெளிநாட்டு மீன்பிடி படகுகளுக்கான சட்டமூலம் தற்போது தயாரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய சட்டமூலத்தினூடாக வெளிநாட்டிலிருந்து இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் படகுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் மேலும் குறைவடைய கூடும் எனவும் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply