LTTE கடற்படை தளபதி சூசையின் படகு தொடர்பில் இலங்கை கடற்படை யின் கருத்து

முல்லைத்தீவு கடலில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் சூசை பயன்படுத்தியதாக கூறப்படும் படகு தொடர்பில் வெளியான செய்திகளில் எந்தவித உண்மையுமில்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.விடுதலைப் புலிகள் தீவிரவாத அமைப்பின் கடற்படை தளபதி சூசையின் பிரதான கட்டுப்பாட்டு அறைகளை கொண்ட படகு முல்லைத்தீவு கடலில் இருப்பதாக அண்மையில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் படகு ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் கரையில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் சமிந்த வலாகுளுகே தெரிவித்துள்ளார்

அத்துடன், குறித்த படகு எந்த காரணத்திற்காகவும் கடலுக்கு அனுப்பப்படவில்லை எனவும் குறித்த படகில் புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்க வேறு ஒரு பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply