வௌிநாட்டு உடன்படிக்கைகளுக்காக அமைச்சுக்களுக்கு விஷேட நபர்

அரசாங்கம் வௌிநாடுகளுடன் எற்படுத்திக் கொள்ளும் உடன்படிக்கைகள் சம்பந்தமாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு உரிய அமைச்சுக்களில் விஷேட நபர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் இதுவரை பல நாடுகளுடன் பல்வெறு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதாகவும், அந்த உன்படிக்கைகள் ஊடாக சிறந்த பிரதிபலன்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறில்லாவிட்டால் அந்த உடன்படிக்கைகள் ஊடாக கிடைக்க வேண்டிய பல பிரதிபலன்கள் இல்லாமல் போகும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply