பாகிஸ்தானில் பஞ்சாயத்து உத்தரவுபடி குடும்பத்தினர் முன்பு 16 வயது சிறுமி கற்பழிப்பு

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் அருகேயுள்ள ராஜ்பூர் கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு 12 வயது சிறுமி உறவினரால் கற்பழிக்கப்பட்டார்.அது குறித்து கிராம பஞ்சாயத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பஞ்சாயத்து கூடி விசாரித்தது. அப்போது சிறுமியை கற்பழித்தவரின் தங்கையை அவரது குடும்பத்தினர் கண் முன்பு கற்பழிக்க வேண்டும் என தீர்ப்பு கூறப்பட்டது.

பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கை என அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சிறுமியை கற்பழித்தவரின் 16 வயது தங்கையை கிராம பஞ்சாயத்து முன்பு கட்டாயப்படுத்தி இழுத்து வந்தனர். பின்னர் கற்பழிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் அப்பெண்ணை கற்பழித்தார்.

இக்கொடூர சம்பவம் போலீஸ் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதை தொடர்ந்து இரு தரப்பிலும் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply