இலங்கை – ஜப்பான் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை பணியாளர்களை பயிற்றுவிப்பதற்காக ஜப்பான் மற்றும் இலங்கைக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜப்பானின் ‘IN JAPAN’ என்ற நிறுவனமும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் இடையே இலங்கையர்களை பயிற்றுவித்தல் மற்றும் தொழில் தொடர்பான புரிந்துணர்விற்குமான உடன்படிக்கையில் ‘IN JAPAN’ நிறுவனத்தின் தலைவர் இக்யோகி யன கிசாவா என்பவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரளவும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இது தொடர்பாக அண்மையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பபெற்ற நிகழ்வில் இந்த உடன்படிக்கைக்கு உட்பட்டதாக நான்கு உப உடன்படிக்கைகளிலும் இவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

இவற்றின் கீழ் இலங்கையில் மனிதவளத்துடன் பயிற்சியை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் யப்பானின் அருங்கலைகள் ஆற்றலை பரிமாறிக்கொள்ளுதல் முதலானவை இவற்றின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுதொடர்பான திட்டம் நவம்பர் மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த பயிற்சி நடைமுறையின் கீழ் நாட்டின் பயிற்சி பணியாளர்களுக்கு ஜப்பானில் உள்ள கைத்தொழில் சாலைகளில் வழங்கப்படும் பயிற்சி ஐந்து வருட காலமாக நீடிக்கப்படவுள்ளது.

பயிற்சி காலப்பகுதியில் அனைத்து வருடங்களிலும் இவர்களது பயிற்சி நடவடிக்கைகள் மதிப்பிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply