ஐ.நா. கூட்டத்தில் மோடிக்கு பதில் அமைச்சர் சுஷ்மா பங்கேற்கிறார்
ஐ.நா.சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள மாட்டார் என்று தெரிகிறது. செப்டம்பர் மாதம் நடக்கும் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார்.ஐ.நா.சபையின் பொதுச்சபை கூட்டம் செப்டம்பர் மாதம் நடக்கிறது. செப்டம்பர் 19-ம் தேதி பொது விவாதம் தொடங்குகிறது. ஒருவாரம் நடக்கும் இக்கூட்டத்தில் பேசுபவர்களின் முதல் பட்டியலை ஐ.நா.சபை வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 23-ம் தேதி காலை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசுகிறார். இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளமாட்டார் என்று தெரிகிறது. கடந்த ஆண்டும் ஐ.நா.சபை கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் செப்டம்பர் 21-ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் செப்டம்பர் 19-ம் தேதி பேசுகிறார். ஐ.நா. கூட்டத்தில் அவர் பேசுவது இதுவே முதல்முறை. டிரம்ப்பின் பேச்சு அனைத்து நாடுகளின் தலைவர்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply