நவாஸ் ஷெரீப் தம்பி மகன் மீது திருமண மோசடி புகார்: இளம்பெண் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷெஹ்பாஸ் ஷெரீப் (58). இவர் பஞ்சாப் மாகாண முதல் மந்திரி ஆக இருக்கிறார்.அவரது மகன் ஹம்சா ஷாபாஸ் ஷெரீப். இவர் மீது ஒரு பெண் திருமண மோசடி புகார் தெரிவித்துள்ளார். அவரது பெயர் ஆயிஷா அகத். இஸ்லாமாபாத்தில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது “கடந்த 2010-ம் ஆண்டு ஹம்சா ஷாபாஸ் ஷெரீப் என்னை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் என்னை கைவிட்டு விட்டார்.

எங்கள் திருமண விவகாரம் நவாஸ் ஷெரீப்புக்கும், அவரது மனைவி குல்சூம் நவாசுக்கும் தெரியும். இது குறித்து பாராளுமன்ற குழு விசாரித்து எனக்கு நியாயம் வழங்க வேண்டும்“ என்றார்.

அதை தொடர்ந்து தற்போது இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பதவி நீக்கத்துக்கு பின் அவரது தம்பி ஷெஹ்பாஸ் ஷெரீப்பை பிரதமராக்க முதலில் நவாஸ் ஷெரீப் திட்டமிட்டிருந்தார்.

எனவே, இவரது பஞ்சாப் முதல்-மந்திரி பதவி அவரது மகன் ஹம்சா ஷெரீப்புக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. அரசியல் சூழ்நிலை மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply