ஹெரோய்ன் போதைபொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது
37 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோய்ன் போதைபொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 376 கிராம் ஹெரோய்ன் போதைபொருளுடன் அவர் கட்டுநாயக்க பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தாய்லந்து நாட்டின் பெங்கொக் நகரத்திலிருந்து நேற்று இரவு 11.20 மணியளவில் குறித்த நபர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.பயணப்பொதியில் சூட்சுமமான முறையில் ஹெரோய்ன் போதைபொருளை அவர் மறைத்து வைத்திருந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலும் கூறினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply