35 அடி பள்ளத்தில் வீழ்ந்தது முச்சக்கரவண்டி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் – நோர்வூட் பிரதான வீதியில் வனராஜா பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று 35 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த 2 பேர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த முச்சக்கரவண்டி மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் பகுதியிலிருந்து அட்டன் நகரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது லொறி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிரே வந்த லொறியுடன் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கரவண்டியும் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் அதில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply