40 இற்கும் அதிகமான இந்திய மீனவர்கள் கைது
இலங்கையின் வடபகுதி கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்த சுமார் 40 இற்கும் அதிகமான இந்திய மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.நெடுந்தீவு கடற்பிராந்தியத்தில் இந்திய மீனவர்களை நேற்றிரவு கைதுசெய்ததாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.
இந்திய மீனவர்களின் 11 படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 9 பேரையும், அவர்களின் 2 படகுகளையும் கடற்படையினர் அதிகாலை காங்கேசன்துறை மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply