தேசிய விவசாயிகள் வாரமாக ஒக்டோபர் முதல் வாரம் பிரகடனம் : ஜனாதிபதி
தேசிய விவசாயிகள் வாரமாக ஒக்டோபர் முதல் வாரத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று பிரகடனப்படுத்தியுள்ளார். நேற்று மட்டக்களப்பு கரடியனாறு விவசாய சேவைகள் பயிற்சி நிலையத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முழு நாடும் ஒன்றிணைந்த விரிவான விவசாய நிகழ்ச்சித்திட்டத்தை அவ்வாரத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி நாட்டு மக்களின் வறுமையினை நீக்கி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் முக்கியத்துவம் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை ஜனாதிபதியால் அண்மையில் நாட்டின் விவசாய மற்றும் கைத்தொழிற்துறையில் விரிவான மாற்றங்களைக் கொண்டு வந்து நாட்டின் தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் நோக்குடன் அமைக்கப்பட்ட தேசிய பொருளாதார சபை முதன் முறையாக எதிர்வரும் 12 ம் திகதி கூடவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply