பிரசன்ன ரணவீர நிதி மோசடி விசாரணைப் பிரிவில்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர நிதி மோசடி விசாரணைப் பிரிவு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களனி பிரதேச சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் நடைபெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பிலேயே குறித்த வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிரிபத்கொட பகுதியில் அரசுக்கு சொந்தமான 80 பேர்ச்சஸ் காணிகளை சட்டரீதியற்ற முறையில் ஆவணம் தயாரித்து விற்றதாகவும் அதில் 2 பேர்ச்சஸ் காணிகளை அவரது உறவினர் ஒருவர் கொள்வனவு செய்துள்ளதாகவும் பிரசன்ன ரணவீர மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply