பாகிஸ்தானில் சீனா உதவியுடன் கட்டப்பட்ட அணுமின் நிலையத்தை பிரதமர் அப்பாஸி திறந்து வைத்தார்

பாகிஸ்தானில் பல அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் நாட்டில் மின்சார பற்றாக்குறை நிலவி வருகிறது. பல மணி நேரம் மின்சாரம் தடைசெய்யப்படுவதால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இதனால் பாகிஸ்தான் அரசு சீனாவுடன் இணைந்து சி-4 என்ற அணுமின் நிலையம் ஒன்றை பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சாஸ்மாவில் அமைத்து வந்தது. அதன் பணி முடிவடைந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் சாகித் ககான் அப்பாஸி நேற்று திறந்து வைத்தார். இது பாகிஸ்தானில் அமைக்கப்பட்ட 5-வது அணுமின் நிலையமாகும்.

சாஸ்மாவில் ஏற்கனவே சி-1, சி-2, சி-3 ஆகிய மூன்று அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கராச்சியில் கே-1, கே-2 என்ற இரண்டு அணுமின் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் நாட்டில் நிலவி வரும் மின்சார பற்றாக்குறை தீர்க்கப்படும் என அவர் கூறினார்.

இந்த திட்டத்திற்கு உதவி புரிந்த சீனாவிற்கு அப்பாஸி நன்றி தெரிவித்தார். மேலும் சாலை அமைத்தல், விமான நிலையம் மற்றும் ரெயில்வே துறையை மேம்படுத்துதல் போன்ற பல திட்டங்களுக்கு பாகிஸ்தான் அரசிற்கு சீனா உதவி புரிந்து வருகிறது. இதற்காக 50 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply