அசாதாரண காலநிலை ஐந்து மாவட்ட மக்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை

நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்தும் நிலவிவரும் அசாதாரண கால­நிலை கார­ண­மாக ஐந்து மாவட்­டங்­க­ளுக்கு விடுக்­கப்­பட்­டி­ருந்த மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மையம் அறிவித்துள்ளது.இரத்­தி­ன­புரி, களுத்­துறை, காலி, கேகாலை மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளுக்கே இவ்வாறு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பாதிப்பேற்­படும் பகுதிகளிலிருந்து மக்­களை உட­ன­டி­யாக வெளி­யே­று­மாறும் அனர்த்த முகாமைத்துவ மையம் பொது மக்களைக் கேட்டுள்ளது.

கடந்த 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் 100 மில்லி மீற்ற­ருக்கும் மேல் மழை­வீழ்ச்சி நாட­ளா­விய ரீதியில் பதி­வா­கி­யுள்­ளது. இதன்­கா­ர­ண­மாக நாட­ளா­விய ரீதியில் ஐந்து மாவட்­டங்­களில் மண்­ச­ரிவு ஏற்­ப­டு­வ­தற்­கான அபா­ய­முள்­ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply