எதிர் நடவடிக்கைக்கு பயமில்லை, தீர்வு தரும் வரை போராட்டம் தொடரும்- இ.மி.ச. ஊழியர்கள்
மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கையை எடுத்தாலும் தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரையில் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என இலங்கை மின்சார சபை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 5 நாட்கள் ஆவதாகவும், இதுவரையில் அதிகாரிகள் எந்தவிதமான தீர்வு நடவடிக்கையையும் முன்வைக்க வில்லையென அச்சங்கத்தின் செயலாளர் ரஞ்ஜன ஜயலால் அறிவித்துள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி நாம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்தோம். இன்று 17 ஆம் திகதிக்கு ஐந்து நாட்கள் ஆகின்றன. இன்றும் போராட்டம் தொடரும். நேற்று வரை அரசாங்கம் ஓய்வு பெற்ற ஊழியர்களை சேவைக்கு அழைத்துள்ளது. இருப்பினும், எந்தவொரு ஓய்வு பெற்ற ஊழியரும் சேவைக்கு சமூகமளிக்க வில்லை.
பொது மக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்குவது அரசாங்கமே. நாம் சேவையிலிருந்து விலகிக் கொண்டவர்களாக கருதப்படுவதாக கடிதங்கள் கூட அனுப்பப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களிலும் எமது தொழில் தொடர்பில் அரசாங்கம் எந்தவிதமான முடிவுகளுக்கு வந்தாலும், தமது போராட்டம் தொடரும் எனவும் மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply