சேவைக்கு திரும்புமாறு கெஞ்சுகிறார் அமைச்சர் ரஞ்சித்.!

பணிபுறகணிப்பில் ஈடுபட்டுவரும் இலங்கை மின்சார சபையின் ஊழியர்களை கூடுமான விரைவில் பணிக்கு திரும்புமாறும் மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இதேவேளை, 14 ஆம் 15 ஆம் திகதிகளை சம்பளத்துடனான விடுமுறையாக கருதுவதாகவும அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றபோது, பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக கூறி இந்த ஆரப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் குறித்து பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளபோதும், தீர்வுகள் எட்டப்படாத நிலையில் இன்று 5வது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது

குறித்த போராட்டத்திற்கு இன்று நள்ளரவு தொடக்கம் இலங்கை மின்சார சபை தொழில் நுட்ப பொறியியலாளர் மற்றும் உதவி மின்சார அத்தியட்சகர்கள் ஒன்றிணைவதற்கு தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையிலேயே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply