அமைச்சர் டிலானுக்கு கருத்துத் தெரிவிக்க சுதந்திரம் உள்ளது : மஹிந்த

அரசியல்வாதிகளாலோ அல்லது ஏந்தவொரு தரப்பினராலோ தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு தான் பதிலளிப்பதில்லையென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, தேர்தல் முறைமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் முன்னெடுக்கப் போகும் தீர்மானம் குறித்து விமர்ஷனம் செய்திருந்தார். இது குறித்து ஆணைக்குழுவின் தலைவரிடம் வினவியதற்கே இவ்வாறு கூறியுள்ளார்.

எதிர்வரும் தேர்தல்களை விருப்பு வாக்கு அடிப்படையில் நடாத்தப் போவதாக கூறியதாகவும், அதற்காக அவர் முயற்சி எடுத்து வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குற்றம்சாட்டியிருந்தார்.

எந்தவொரு நபருக்கும் எந்தவொரு கருத்தையும் தெரிவிப்பதற்கு கருத்துச் சுதந்திரம் உள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய மேலும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply