ஜனாதிபதியும் பிரதமரும் ஏன் நடவடிக்கை எடுக்காதுள்ளனர்? : ஜோன்ஸ்டன் கேள்வி

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்தது போன்று மகாநாயக்கர்களை அவமதித்துப் பேசிய பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஏன் அதிகாரம் இல்லாதிருப்பதாக முன்னாள் அமைச்சரும் மஹிந்த குழு பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணாந்தோ தெரிவித்தார்.

ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு சமயம் என்று ஒன்று இல்லை. இரத்னபுரியில் தேர்தலில் போட்டியிடும் போது தான் ஒரு பௌத்தர் என்றார். அதேபோன்று கம்பஹாவில் போட்டியிடும் போது தான் ஒரு கத்தோலிக்கர் எனக் கூறிக் கொண்டார்.

ஜனாதிபதியும் பிரதமரும் அறிந்த நிலையிலேயே தான் ரஞ்ஜன் ராமநாயக்க மகாநாயக்கர்களுக்கு ஏச்சுப் பேச்சில் ஈடுபட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply