வட மாகாண ஆளுநர் – பொலிஸ் அதிகாரிகள் சந்திப்பு
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் வடமாகாண பொலிஸ் அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வடமாகாண பாதுகாப்பு தொடர்பிலான குறித்த சந்திப்பு நேற்று வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் வடமாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தலைமையில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் கலந்துகொண்டனர்.
வடமாகாணத்தின் பாதுகாப்பு, பொலிஸாரின் கடமைகள், வாகன மற்றும் போக்குவரத்து சட்டங்கள், சிவில் பொலிஸ் பிரிவினரால் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையங்களை அரசுக்குச் சொந்தமான இடங்களில் நிர்மாணிப்பது தொடர்பிலும் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply