ஆஸியில் இலங்கை அகதி தற்கொலை

அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்கொலை முயற்சியின் பின்னர், அவர், அப் பகுதி வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தின் வேண்டுகோளிற்கு இணங்க, உயிரிழந்தவரின் பெயர், விபரங்கள் வௌியிடப்படவில்லை என, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. 

இதேவேளை, பலியான இலங்கைத் தமிழர், ஒரு அகதி என உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவர் எனவும், அவர் கடந்த சில மாதங்களாக மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் மனுஸ் தீவு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். எனினும் அவரது நண்பர் அவரை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்தார் என, அந்த தீவிலுள்ள மற்றுமொரு அகதி கூறியுள்ளார்.

மேலும், குறித்த வைத்தியசாலையில் போதுமான வைத்திய ஆதரவு கிடைக்காமையினால், அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உறுதி செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாம் எமது மற்றுமொரு சகோதரரை இழந்து விட்டோம் என, பிறிதொரு அகதி, சமூக வலைத் தலங்களில் கருத்து வௌியிடுகையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மரணம் பப்புவா நியூ கினி பொலிஸாரினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கை தோல்வியடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய கடல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மனுஸ் தீவில் இதுவரையில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மற்றுமொரு தீவான நவ்று தீவுகளில் குறைந்தது மூன்று பேர் இதுபோன்று பலியாகியுள்ளதாகவும், தகவல்கள் வௌியாகியுள்ளன.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply