அரியானாவில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது போல தமிழகத்தில் தே.மு.தி.க. ஆட்சியை பிடிக்கும்: விஜயகாந்த்
சேலம் மாநகர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளராக இருப்பவர் ராதாகிருஷ்ணன். இவரது தாயார் கிருஷ்ணவேணி அம்மாள். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். இதையடுத்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் நேற்று மாலை கிச்சிப்பாளையத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் கிருஷ்ணவேணி படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
அப்போது விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் மழை வெள்ள நிவாரண பணிகளை சரியாக செய்யாததால் அ.தி.மு.க. ஆட்சி தோற்று விட்டது. ஒரு நாள் மழைக்கே சென்னை தாக்கு பிடிக்கவில்லை. தொடர்ந்து மழை பெய்தால் சென்னை என்னவாகும், அதனால் தான் திரும்ப திரும்ப சொல்கிறேன், இது தோல்வி ஆட்சி.
5 வருடத்தை ஒப்பேத்த அதை செய்கிறேன், இதை செய்கிறேன் என்று கூறி வருகிறார்கள். புது புது திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதி ஒதுக்குபவர்களுகே போய் சேருகிறது. மாநிலத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை.
அரியானாவில் இதற்கு முன்பு பா.ஜனதா ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் தற்போது அவர்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். அது போல தமிழகத்தில் தே.மு.தி.க. சிறப்பாக வளர்ந்து வருகிறது. பா.ஜனதா கட்சி அங்கு ஆட்சியை பிடித்தது போல தமிழகத்தில் எங்கள் கட்சி ஆட்சியை பிடிக்கும். பா.ஜனதாவில் இருந்து தனக்கு அழைப்பு வரும். ஆனால் தனியாகத்தான் தேர்தலில் போட்டியிடுவோம்.
தமிழக அமைச்சர்கள் முரண்பாடாக பேசுவது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். ஜெயலலிதா இறந்து விட்டதால் அமைச்சர்கள் ஆள், ஆளுக்கு பேசுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் அவைத்தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ், புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் இருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply