வௌ்ளவத்தை தொடர்மாடிக் குடியிருப்பில் பாதுகாப்பு உத்தியோகத்தர் தூக்கிட்டுத் தற்கொலை

கொழும்பு – வௌ்ளவத்தை பிரதேசத்திலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பொன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.கொழும்பு- 13 ஜிந்துப்பிட்டியைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தரான 37 வயதுடைய எம்.ஆர்.திலகராஜா என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடமை புரியும் தொடர்மாடிக் குடியிருப்பின் நுழைவாயில் தூண் ஒன்றிலேயே குறித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply