தேசிய ஒற்றுமையினை பள்ளிவாசலினால் வளர்க்க முடியும் : உடுவே தம்மாலோக தேரர்

“பள்ளிவாசல் என்பது ஒரு சமுகத்துக்குக்கான மத சடங்குகளை மட்டும் நடத்துகின்ற இடமல்ல. அதனைத் தாண்டி – அண்டி வாழும் ஏனைய மக்களையும் அரவணைத்து, தமது நல்ல பணியினால் தேசிய சக வாழ்வுக்கான ஒற்றுமையினையும் ஒரு பள்ளிவாசலினால் வளர்க்க முடியும் என்பதை கிருலப்பனை பள்ளிவாசல் செய்து காட்டியுள்ளது” என, உடுவே தம்மாலோக்க தேரர் தெரிவித்தார்.

கொழும்பு கிருலப்பனை ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் கிருலப்பனை பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் ஏற்பாட்டில், இலவச மருத்துவ முகாமொன்று நேற்று நடைபெற்றது.

இந்த வைத்திய முகாமின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றம் 25க்கும் மேற்பட்ட முஸ்லிம், சிங்கள மற்றும் தமிழர் சமூகங்களைச் சேர்ந்த வைத்தியர்கள் இணைந்து 500க்கும் மேற்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்து அவா்களுக்கு இலவச சிகிச்சைகளையும் மருந்துகளையும் வழங்கினர்.

இந்த வைத்தியமுகாமுக்கு ரிச்சாட் பீரிஸ் நிதிக் கம்பணியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.எம். எம். ஜபீா் அனுசரனை வழங்கி இருந்தார்.

குறித்த வைத்திய முகாம் ஆரம்ப நிகழ்வில் ராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, உடுவே தம்மாலோக தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர்கள், கிறிஸ்தவ மற்றும் இந்து மதத் தலைவா்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply