சீனாவில் அரசுக்கு எதிராக செயல்பட்டவருக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனை
சீனாவின் தென்பகுதியில் உள்ள புளியான் மாகாணத்தை சேர்ந்தவர் வு கான். இவர் மனித உரிமைகளுக்காக போராடும் இயக்கத்தை சேர்ந்தவர்.கடந்த 2015-ம் ஆண்டு அவர் சீன அரசு மக்களுக்கு எதிராக தனது அதிகாரத்தை பயன்படுத்தி அடக்குமுறையில் ஈடுபடுவதாக ஆன்லைன் மூலமும், தெருக்களிலும் பிரசாரம் செய்து வந்தார்.எனவே அரசுக்கு எதிராக இவர் செயல்படுவதாக கூறி கைது செய்யப்பட்டார். இவர் மீது தியாஷின் நகராட்சி 2-வது மக்கள் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த கோர்ட்டு இவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாக வு கான் அறிவித்துள்ளார்.
இதேபோன்ற மற்றொரு வழக்கில் மனித உரிமை போராளி ஸி யாங் விடுதலை செய்யப்பட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply