லிபியாவில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் பலி

லிபியா நாட்டில் மசூதியில் தொழுகை முடித்து வந்தவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக பலியாகினர். லிபியா நாட்டின் பெங்காஷி நகரில் அல் சல்மானி மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள மசூதியில் நேற்று மாலை தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்து பொதுமக்கள் வெளியே வந்த சமயம் அங்கு இரண்டு கார்களில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறின.

இந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 22 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பலியான உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களில் பொதுமக்களும், போலீசாரும் அடங்குவார்கள். காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply