தென் கொரியாவில் மருத்துவமனையில் தீ விபத்து; பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
தென் கொரியா நாட்டின் மிர்யாங் நகரில் செஜாங் என்ற மருத்துவமனை அமைந்துள்ளது. இங்குள்ள 6 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தில் மருத்துவமனை மற்றும் ஒரு நர்சிங் ஹோம் இயங்கி வந்தது. இந்த நிலையில் இன்று காலை இதன் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அவசரகால சிகிச்சை பிரிவு அறை ஒன்றில் திடீரென தீ பற்றி கொண்டது என்று மருத்துவமனையின் 2 செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.
தீ விபத்து ஏற்பட்டபொழுது மருத்துவமனையில் 200 பேர் இருந்துள்ளனர். இந்த தீ விபத்தில் 15 பேர் பலியாகி உள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. 11 பேரது நிலைமை மோசமடைந்து உள்ளது. 40 பேர் காயமடைந்து உள்ளனர் என முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. 70 பேர் காயமடைந்துள்ளனர்.
தீ விபத்தினை அடுத்து அனைத்து நோயாளிகளும் மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம் ஒன்றில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களில் பலர் வழியிலேயே இறந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply